Friday, May 08, 2015


Disgusting - அருவருப்பின் உச்சம்

சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்தாலும் வந்தது மும்பையின் திரைத்துறையினருக்கு பித்தம் தலைக்கேறி விட்டது.

அதிலும் குறிப்பாக அபிஜித் பட்டாசார்யா என்ற ஒரு பாடகன் செய்த செயல் அருவருப்பின் உச்சமாக இருக்கிறது. இந்த பரதேசி நாய் தனது ட்விட்டரில் கீழ்கண்டவாறு சொல்லி இருக்கிறான்.

"மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்கும் இடமா? அப்படி தூங்க வேண்டும் என்றால் எங்காவது கிராமத்திற்கு சென்று எங்கே எந்த வாகனங்களும் உங்களை கொல்ல முடியாதோ அங்கே தூங்க வேண்டியது தானே."

"திரை உலகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். சல்மானுக்கு ஆதரவு தெரிவியுங்கள். மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்குவதற்கான இடங்கள் அல்ல. அங்கே தூங்கியது அவர்களின் தவறு. அந்த விபத்து சல்மானின் குற்றமும் அல்ல, மதுவின் குற்றமும் அல்ல."

"சாலைகள் வாகனங்கள் செல்வதற்கும், நாய்களுக்குமானவை. அதில் தூங்கும் மனிதர்களுக்கானவை அல்ல. சல்மான் மீது ஒரு தவறும் இல்லை."


இந்த அறிவு ஜீவியின் கருத்துப்படி அஜ்மல் கசாப் சும்மா சுடத்தான் செய்தான். அது தவறா? அவன் சுடும் போது அவனது குண்டுகளுக்கு முன்னால் மக்களை யார் சென்று நிற்க சொன்னார்கள்? தர்மபுரியில் அதிமுகவினர் சும்மா பேரூந்தைதான் எரித்தார்கள். அது தவறா? அப்படி அவர்கள் எரிக்கும் போது அந்த மாணவிகளை யார் அந்த பேரூந்துக்குள் இருக்க சொன்னார்கள்?

கீழே உள்ளது அந்த நாதாரியின் ட்விட்டர்.


போடாஆஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்க்க்க்க்க்க்க்க்க்................. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. I think we must really mandate a license to procreate. Genes like Abhijeet’s should not be allowed to thrive or mutate.

நேற்று ஒருவர் ஒரு இணைய தளத்தில் கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருந்தார். அதனுடன் நான் முழுதும் உடன்படுகிறேன். Those who stand by Salman, must stand in front of his SUV.

9 Comments:

வருண் said...

மும்பைவாசிகள், டெல்லிவாசிகள் சிந்தனையெல்லாம் இப்படித்தான் இருக்குங்க.. ஏழைகளை அவர்கள் பார்க்கும் விதமே வேறதான். நான் ஒரு சிலரிடம் டிஸ்கஸ் பண்ணிட்டு என்னடா இப்படிப் பேசுறாரு இந்தாளுனு நெனச்சு இருக்கேன். He was telling me, they throw their little kid in front of the car and victimize them to get money. He did say that and he was from Mumbai. I do think some poor people who live in slums of metro abuses the system but these "rich" guys are idiots and closed-minded for sure!

வருண் said...

YOU DONT HAVE TO PUBLISH this! :)

தல: நானும் பல முறை மிஸ் ஸ்பெல் பண்ணியிருக்கேன். அதை "அருவருப்பு"னு எழுதணும்ணு நினைக்கிறேன். கொஞ்சம் தேடிப் பாருங்க. விடை கிடைக்கும். Just double check! :)

SathyaPriyan said...

சுவை - அருசுவை போல வெறுப்பு - அருவெறுப்பு என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லையா?

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி வருண். திருத்திவிட்டேன்.

நண்பா said...

really disgusting...!!! :(
நண்பர் வருண் சொல்லியபடி சிலரின் பார்வையே அப்படி தானோ என்று வருந்த தோன்றுகிறது...

SathyaPriyan said...

@வருண், @சிவா,

என்ன சொல்வது? வாழ்வதற்கு வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான், அதில் இருக்கும் ஆபத்துகளை உணர்ந்து தான் இவர்கள் எல்லாம் சாலையில் உறங்குகிறார்கள்.

அங்கும் கூட குடிவெறியில் காரை ஓட்டி, அவர்களை கொன்றுவிட்டு, பயத்தில் ஓடி ஒளிந்து, பத்தாண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து, தனக்கு எதிராக சாட்சி சொன்ன காவலரை மிரட்டி, அவரது குடும்பத்தினரை வைத்தே அவருக்கு மனநிலை சரி இல்லை என்று சொல்ல வைத்து, கடைசியாக தனது டிரைவர் தான் வண்டியை ஓட்டினார் என்று கூறி இவ்வளவு செய்த ஒருவனுக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்றால், "மக்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?" என்ற கேள்வி தான் என்னுள் எழுகிறது.

இதுவும் கடந்து போகும்.

மகிழ்நிறை said...

அதே! அதே! அதே கோபம் தான் எனக்கும் வந்தது. ஒரு நாள் அந்த சிங்கர் சொத்தையெல்லாம் பறிச்சுகிட்டு, ரோட்ல விட்டாதான் அவருக்கும் புரியும். ஆனா உங்க ஸ்லாங், எனக்கு பயமா இருக்கு பாஸ்! இவ்ளோ கொலைவெறி தேவையா?? வருண் நண்பர்னு ப்ரூவ் பண்ணுறீங்க. வருண் தப்பா எடுத்துக்க மாட்டார். அவர் என் friend தான். நான் உங்கள hurt பண்ற மாதிரி சொல்லிருந்தேன்னா மன்னிசூ:)

மகிழ்நிறை said...

follower BUTTON னே காணோமே mr.S.P???

SathyaPriyan said...

//
ஆனா உங்க ஸ்லாங், எனக்கு பயமா இருக்கு பாஸ்! இவ்ளோ கொலைவெறி தேவையா??
//
கோபமும் ஒரு உணர்ச்சி தானே? தக்க பொழுதில் தக்க முறையில் அதை வெளிப்படுத்துவதில் தவறு இல்லை என்பது எனது கருத்து. இன்னும் சொல்லப் போனால் இப்போதெல்லாம் எனக்கு கோபமே வருவதில்லை.

ஆனால் இங்கே வெளிப்படுத்தியது ஒரு வித ஆயாசமே. கோபம் அல்ல. எனக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஒரு பெரும் பணக்காரன் குடித்து விட்டு வண்டி ஓட்டி எனது காலை ஒடித்து விட்டால், அதன் பின்னர் சட்ட ஓட்டைகளின் துணை கொண்டு அவன் தப்பித்து விட்டால், அதற்கு இந்த பாடகனை போன்றவர்கள் மன சாட்சியே இல்லாமல் அதரவு அளித்தால், எனது குடும்பம் தெருவில் நின்றால், நான் எப்படி எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேனோ அப்படித்தான் இங்கும் வெளிப்படுத்தி இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் என்னை வைத்து பார்த்ததால் வந்த வெளிப்பாடு. அவ்வளவே :-)

SathyaPriyan said...

//
follower BUTTON னே காணோமே mr.S.P???
//
ஆஹா இத நான் எங்க போயி தேடுவேன்? இருங்க தேடி பார்த்துட்டு சொல்றேன்.