Wednesday, May 02, 2012


அற்புதத்தீவு பஹாமாஸ் - பகுதி 1

இந்த வார இறுதியில் பஹாமாஸ் தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தோம். நல்ல அனுபவமாக அமைந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்கா வந்ததிலிருந்தே பஹாமாஸ் போக வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. எல்லா நல்லவைகளுக்கு தகுந்த வேளை வர வேண்டும் என்பதை போல இதற்கும் நல்ல வேளைக்காக காத்திருந்தோம் என்று நினைக்கிறேன்.

விடுமுறைக்கு பஹாமாஸ் போகலாம் என்பதே திடீரென்று முடிவான ஒன்று. புது வருட பிறப்பன்று தான் முடிவு செய்தோம்.

முதல் கேள்வி நாங்கள் வசிக்கும் வாஷிங்டன் டிசி யிலிருந்து ஃப்ளோரிடாவில் உள்ள மையாமி சென்று அங்கிருந்து கப்பலில் பஹாமாஸ் செல்லலாமா? இல்லை இங்கிருந்தே விமானத்தில் நேரடியாக பஹாமாஸ் செல்லலாமா? என்பது தான். சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்த பிறகு இங்கிருந்து நேரடியாக செல்வதே சிறந்தது என்று முடிவு செய்தோம்.

அதற்கான காரணங்கள்;

  1. a) கப்பலில் மூன்று நாட்கள் கழிக்க வேண்டும் என்பதால் எனது மகனுக்கு கடல் பயணம் ஒத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது.
  2. b) பஹாமாஸின் முக்கிய தீவான நஸாவ் என்ற தீவில் கப்பல் ஒரு நாள் மட்டுமே இருக்கும். ஆனால் எங்களுக்கு அங்கே குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது இருக்க வேண்டும் என்ற ஆவல்.
  3. c) குறைந்த கால அவகாசத்தில் பயணம் முடிவு செய்த காரணத்தால் கப்பலில் நல்ல அறைகள் கிடைக்க வில்லை.

எனது மனைவி பல தளங்களுக்கு சென்று நாங்கள் பயணிக்க வேண்டிய வீசா, விமான டிக்கெட், நாங்கள் தங்கிய அட்லான்டிஸ் ஹோட்டலில் அறை, பயணத்திற்கு தேவையான ஷாப்பிங் என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தார். மாண்டியை நான்கு நாட்கள் வெளியில் விட்டு செல்வது தான் சிறிது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அவனை அழைத்து செல்வது இயலாத செயல். அதனால் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொள்ளும் கிம் என்ற பெண்ணிடம் அவனை ஒப்படைத்து விட்டு சென்றோம்.

முதல் நாள் சனிக்கிழமை பஹாமாஸ் தீவில் உள்ள அட்லான்டிஸ் பீச்சிற்கு சென்றோம். வெள்ளை மணல் திட்டு அதில் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் நீர். மேலே நீல வானம். அருமையான காட்சி. நெடு நேரம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு அறைக்கு திரும்பினோம். அன்று மாலை அட்லாண்டிஸ் தீவில் நடந்து சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தோம். இந்த தீவில் இளநீருடன் ரம் கலந்து தருகிறார்கள். எனக்கு மாமன் மகள் படம் நினைவிற்கு வந்தது. பின்னர் அந்த தீவில் உள்ள அக்வாரியம் சென்று ரசித்தோம். சுமார் 50,000 கடல் வாழ் உயிரினங்கள் உள்ள இடம் அது.

ஞாயிற்றுக் கிழமை ஒரே மழை. அதனால் நான் அங்கேயே இருந்த வாட்டர் பார்க்கிற்கும் எனது மனைவி காஸினோவிற்கும் சென்றார். மாயன் டெம்பிள் என்ற ரைடில் சுமார் 75 அடி செங்குத்தான சறுக்கம். நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்த நாள் திங்கட் கிழமை நாங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்த பல தீவுகள் மூடி விட்டனர் மழை காரணமாக. அதனால் பாராஸைலிங் போன்றவற்றை செய்ய இயலவில்லை. அந்த ஊரின் சந்தைக்கு சென்றோம். சந்தையில் எங்கு பார்த்தாலும் பாப் மார்லியின் படம் வைத்த டீ ஷர்டுகள். ஆடைகள் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டும். அன்று இரவு காஸினோவிற்கு சென்று இரவு 1 மணிவரை விளையாடிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் செவ்வாய் கிழமை காலை பாரடைஸ் தீவை சுற்றி பல இடங்களில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வாஷிங்டன் டிசி வந்து சேர்ந்தோம்.


பஹாமாஸ் தீவில் தேங்காய் ரம் தான் ஃபேமஸாக இருக்கிறது. பைனாப்பிள் ஜூசுடன் கலந்து அடிக்கிறார்கள். அருமையாக இருக்கிறது. நாங்கள் தங்கிய மூன்று இரவிலும் அதுதான் உள்ளே சென்றது தொடர்ச்சியாக. அமெரிக்காவில் அது எங்கே கிடைக்கும் என்று பார்க்க வேண்டும். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சுருட்டு விற்க்கும் கடை ஒன்று இருந்தது. சரி சுருட்டு ஒன்று வாங்கலாம் என்று கருதி அங்கே சென்றோம். அங்கே ஒரு சுருட்டு எட்டு டாலர் என்ற விலையில் தொடங்கி ஒரு சுருட்டு சுமார் 500 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கிறது. குறைந்த விலை சுருட்டுகள் நான்கை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

பஹாமாஸ் தீவில் டாக்ஸி படு சீப்பாக கிடைக்கிறது. ஆனால் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் விலை அனைத்தும் பல மடங்கு அதிகம். ஒரு சிறிய வாட்டர் பாட்டில் ஐந்து டாலர்கள். ஒரு வாழை பழம் மூன்றரை டாலர்கள். காலை மற்றும் மதிய உணவை நாங்கள் அங்கேயே முடித்துக் கொண்டோம். இரவு உணவிற்கு ஒரு நாள் க்ளே அவன் என்ற இந்திய உணவகத்திற்கும், மறு நாள் ட்வின் ப்ரோஸ் என்ற கரீபியன் உணவகத்திற்கும் சென்றோம். மீன் அட்டகாசமாக இருந்தது.

அடுத்த வாரம் பஹாமாஸ் தீவில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால் ஊர் முழுவதும் போஸ்டர்களும், ஊர்வலங்களும், பிரச்சாரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான FNM (Free National Movement) மற்றும் எதிர் கட்சியான PLP (Progressive Liberal Party) ஆகியவை முக்கியமான கட்சிகள். டாக்ஸி ட்ரைவர்களிடம் பேசியதில் பணக்காரர்கள், வெளியூர் ஆட்கள் வந்து தங்கும் பகுதிகளில் தான் வளர்ச்சி இருப்பதாகவும் மற்ற இடங்களில் ஒன்றும் இல்லை என்றும் குறிப்பிட்டார்கள். ஊரை சுற்றி பார்த்ததில் அது உண்மை என்றே தெரிகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் 24 மணி நேர குடிநீர், மின்சாரம் போன்றவை இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் அங்கும் உள்ளது.

மொத்தத்தில் நான்கு நாட்கள் பஹாமாஸ் தீவில் காஸினோ, பீச், வாட்டர் பார்க் என்று மகிழ்ந்தனுபவித்தோம். பஹாமாஸ் நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பயணத்தில் எடுத்த புகைப்படங்களை விரைவில் வலையேற்றுகிறேன்.

9 Comments:

Anonymous said...

படங்களைக் காண + மேலும் அனுபவங்கள் வாசிக்க காத்திருக்கிறேன் நண்பரே...

சித்தார்த்தன் said...

உங்கள் பதிவு அருமை நண்பரே...தொடருங்கள் ........

சித்தார்த்தன் said...

பதிவு அருமை

Senthil Kumaran said...

கரீபியன் தீவுகளில் மழை சகஜம். ஒரு வாரம் இல்லை பத்து நாட்களாவது தங்க வேண்டும் அப்பொழுது தான் மழையின் ஆப்பிலிருந்து தப்பிக்கலாம். சில சமயம் பத்து நாட்களும் மழை பெய்யும் வாய்ப்பும் இருக்கிறது. எல்லாம் நமது அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

குறைந்த நாட்களில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூக அவலங்களை கவனித்துள்ளீர்கள்.

நல்ல பதிவு. புகைபடங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

SathyaPriyan said...

//
ரெவெரி said...
படங்களைக் காண + மேலும் அனுபவங்கள் வாசிக்க காத்திருக்கிறேன் நண்பரே...
//
நன்றி ரெவெரி. அடுத்த பதிவில் படங்களை வெளியிடுகிறேன்.

//
சித்தார்த்தன் said...
உங்கள் பதிவு அருமை நண்பரே...தொடருங்கள் ........
//
நன்றி சித்தார்த்தன். முதல் முறை வருகிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

//
Senthil Kumaran said...
எல்லாம் நமது அதிர்ஷ்டத்தை பொறுத்தது.
//
அப்படி ஒரு வஸ்து எனது ஜாதகத்தில் கிடையவே கிடையாதே :-)

//
நல்ல பதிவு. புகைபடங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
//
நன்றி Senthil Kumaran.

பால கணேஷ் said...

உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

SathyaPriyan said...

//
கணேஷ் said...
உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
//
என்னையும் மதித்து எனது பதிவின் சுட்டியை சேர்த்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய மற்ற சுட்டிகளையும் படித்து விடுகிறேன்.

//
arul said...
arumai
//
நன்றி arul.

Arunkumar said...

waiting to c the snaps thala...

sure, Bahamas must hv been a gr8 trip..

naalu suruttu hmm... nadakkattum..

கோவி.கண்ணன் said...

எனது பதிவொன்றையும் குறிப்பிட்டு சொல்லி இருப்பதற்கு மிக்க நன்றி திரு சத்யப்ரியன்