Monday, September 20, 2010


மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய் கசிவு

ஒரு வழியாக சரியாக ஐந்து மாத போராட்டத்திற்கு பின்னர், 11 மனித உயிரினை குடித்து விட்டு, பல லட்சம் கடல் வாழ் உயிரினங்களை கொன்று விட்டு, சுமார் 775 மில்லியன் லிட்டர் எண்ணையை மெக்ஸிகோ வளைகுடாவில் கலந்த பின்னர், சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் BP நிறுவனத்திற்கு செலவு வைத்த பின்னர் ஒருவழியாக இந்த மாதம் 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்படுத்திய கிணறு மூடப்பட்டது.

தனியார் நிறுவனங்கள் மீது அரசு வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கி இருக்கின்றன.



BP நிறுவனம் பாதிப்புகளை சரி செய்வதற்காக 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை அளித்துள்ளது. தவறுகளை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இது என்ன இந்தியாவா? சுமார் 10000 உயிர்களை வாங்கிய போபால் விஷ வாயு தாக்குதலில் சம்பந்த பட்டவர்களுக்கு 25 ஆண்டுகள் கழித்து வெறும் 14000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்க?

0 Comments: