Wednesday, October 29, 2008


அன்பே சிவம் தோல்விப் படமா?

இப்பொழுது தமிழ் பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்விளையாட்டு "சினிமா கேள்வி பதில்கள்". இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் பதில்களை பதிந்துள்ளனர். அதில் நானும் ஒருவன்.

அதிலும் குறிப்பாக "மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?" என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் "அன்பே சிவம்" என்று பதில் அளித்துள்ளனர்.



"மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? அன்பே சிவம்" என்று கூகுளிட்டேன். அது சுமார் 108 என்று விடையளிக்கிறது.

டாக்டர் புருனோ அவர்களோ அன்பே சிவத்தை பற்றி தனிப் பதிவே இட்டுவிட்டார். அப்படத்தினை பற்றிய எனது கருத்துக்களை பிரதிபலிப்பது போலவே அவரது பதிவு இருந்தது.

அன்பே சிவம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருக்கலாம், வனிக ரீதியாக பெரும் தோல்வி கண்ட படமாக இருக்கலாம், ஆனால் மனிதநேயத்தை அன்பே சிவத்தினை காட்டிலும் அழகாக வெளிப்படுத்திய தமிழ் படங்கள் குறைவே.

கமலிடமிருந்து அதன் பிறகு அப்படி ஒரு படம் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் பதிவெழுதிய சுமார் 100 பதிவர்களை தாக்கிய படம் அது என்பதை எண்ணி பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒரு படத்தின் உச்ச கட்ட வெற்றி இது தான்.

அந்த வெற்றியை தந்த கமல், மாதவன், சுந்தர்.சி மற்றும் வித்யாசகர் கூட்டணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

5 Comments:

Nilofer Anbarasu said...

//அந்த வெற்றியை தந்த கமல், மாதவன், சுந்தர்.சி மற்றும் வித்யாசகர் கூட்டணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
//
சுந்தர் சி, மாதவன் எல்லாம் எதுக்குங்க சேக்குறீங்க? இந்த வெற்றி, கமலுடைய வெற்றி :)

jas said...

hi priyan....somehow i came to ur blog and very happy to see your post about the great ulaga naayagan..am a theevira fan of kamalahassan..like u said... anbe sivam is a movie which made a great impact on many people...the character which kamal portrays in this movie as nalla sivam is absolutely awesome...his limping walk and the twitch which he lets out once in a few seconds is something which an ordinary actor can't perform.... it's a stellar role which kamal has never ever portrayed....a daring act of an actor who never cares about being portrayed in an ugly manner....The dialogues in the movie are commendable.....TOtally, it's a perfect blend of fine acting, philosophy and wat else to say????

சின்னப் பையன் said...

இங்கே பாருங்க:

http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_13.html

Unknown said...

உங்களிடைய தளத்திலுள்ள பல பதிவுகளும் முக்கியம் வாய்ந்தது. வலைச்சரம் ஆசிரியர் மாதங்கி மூலமாக உங்கள் பதிவுகளைக் காண நேர்ந்தது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

http://blogintamil.blogspot.com

கிருஷ்ணப் பிரபு.

Sundararaman said...

Watch hey ram !