Monday, August 21, 2006


பொறியியல் கல்லூரிகளின் பரிதாபமான நிலை

இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடை பெறுகிறது. ஆகஸ்டு 15, 2006 தேதி வரை 22000 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை முடியும் போது இது 17000 என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் மொத்தம் உள்ள 250 கல்லூரிகளில் 12 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பி இருக்கின்றன.


தமிழ் நாடு என்று இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களிலும் இந்த நிலை தான்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி பொட்டுக் கொண்டு இருந்தனர். இன்று மட்டும் ஏன் இந்த நிலை?


இதோ எனக்கு தெரிந்த சில காரனங்கள்
  • புற்றீசல் போல கிளம்பிய சுய நிதிக் கல்லூரிகள்
  • அவற்றின் கல்வித் தரம் பற்றி மாணவர்களிடையே இருக்கும் சந்தேகம்
  • வருவாய்க்காக எந்த விதமான பரிசோதனைகளும் செய்யாமல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் அரசு
  • ஆங்கில இலக்கியம், Visual Communication போன்ற துறைகளுக்கு மாணவர்களிடையே அன்மை காலமாக வளர்ந்து வரும் வரவேற்பு
  • Call Centre, BPO போன்ற நிருவனங்களில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள்

இந்நிலையில் சற்றும் மாறாத ஒன்று, தங்களின் பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ படிப்பதே தங்களுக்கு பெருமை என்று பல பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருப்பது. அவ்வாறு படிப்பதே அவர்களது வாழ்க்கையை நன்கு அமைக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில மாணவ மாணவியரும் அவ்வாறு படிப்பதே பெருமை என்றெண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளிலோ வருடாந்திர கட்டணங்கள் ஆயிரங்களை தாண்டி லட்சங்களில் வந்து நிற்கிறது. பணம் படைத்த பெற்றோர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. ஆனால் ஏழை/நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோருக்கு?

VRS வாங்கிக் கொண்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று அவர்கள் தங்களது பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அவ்வாறு சேர்த்த கல்லூரி நன்றாக அமைந்தால் கவலையில்லை. ஆனால் 80% மேற்பட்ட கல்லூரிகள் அடிப்படை வசதி கூட இல்லாமலே இருக்கின்றன.

இதன் உச்ச கட்டமாக பல கல்லூரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லூரியில் படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத முன்னாள் மாணவர்களை கொண்டே பாடம் நடத்துகின்றனர். நல்ல ஆசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத காரனத்தினால் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களை படிப்பதற்கோ, தேர்வுகளில் அகிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெருவதற்கோ மாணவர்களால் இயலவில்லை.

உலகிலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகளை தேர்விக்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முன் இனியாவது இதை கவனிப்பார்களாக. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பொறியியல் மீதான மோகம் நீங்கி பல புதிய துறைகளில் நுழைந்து படித்து சாதனை புரிவார்களாக.

9 Comments:

SathyaPriyan said...

எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டிய திரு. வடுவூர் குமார் அவர்களுக்கு நன்றி. அவரது பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என்றும், தன்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதில் தங்களை தவறாக புரிந்து கொள்ள ஒன்றுமே இல்லை திரு. வடுவூர் குமார் அவர்களே. பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல.

வடுவூர் குமார் said...

யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லாததால் அப்படி போட்டேன்.
தொடருங்கள் உங்கள் தமிழ் பணியை..
வாழ்த்துக்கள்.

Syam said...

நீங்கள் சொல்வது சரி...ஆனால் இது முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா கதை தான்...
அரசாங்கமா...மக்களா யார் முதலில் திருந்துவது...மக்கள் தவறு செய்தால் அரசாங்கம் திருத்தலாம் அரசாங்கமே தவறு செய்தால்?

SathyaPriyan said...

அரசாங்கம் தவறு செய்கிறது என்பது மிகவும் சரி Syam. ஆனால் இனி அது திருந்தி ஒரு பயனும் இல்லை.

Damage has already been done. 250க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை திறந்தாகி விட்டது. அவற்றை மூடினாலோ அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தாலோ அதில் படித்து முடித்த/படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

"I want to do operation. I do not want to do postmortem." என்று எனது மேலாளர் கூறுவார். ஆனால் துரதிருஷ்டவசமாக நாம் இப்போது postmortem செய்யும் நிலையில் தான் உள்ளோம்.

கருத்திற்கு நன்றி.

Priya said...

உங்கள் blog க்கு முதல் முறையாக வருகிரேன். மிகவும் அருமையான பதிவுகள்.

As for the issues about the Engineeting colleges, in my view, the reason for the mushrooming colleges is the craze amongst the public. As you have rightly pointed, though there are many new fields with plenty of opportunities, parents prefer their children to go into Engineering field (especially IT). I, my brother and many of my cousins who wanted to do fashion designing, catering technology, vis-com etc. all ended up doing Engineering :) Easier said than done. huh? Middle class parents in a growing country like India want their children to enter into a filed that guarantees a decent job. The un-filled seat in Engineering colleges is a sign of changing mind-set.

SathyaPriyan said...

Thank you for your visit and comments.

Amar said...

ப்ரியா அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் ...
நம்மாளுக அப்படி தான்..புடிச்சா ஒரே மாதிரி.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல செய்தி அலசல். தந்தமைக்கு நன்றி.

மென்பொருள்துறையில் வேலை பார்க்கவேண்டுமென்கிற எண்னம்கூட மக்களை பொறியியல் கல்வியில் ஈடுபடச் செய்யலாம்.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Samudra மற்றும் சிறில் அலெக்ஸ்.